காங்கிரஸில் இணைந்தார் ஷில்பா ஷெட்டி
By DIN | Published On : 06th February 2019 05:31 AM | Last Updated : 06th February 2019 05:31 AM | அ+அ அ- |

பிரபல ஹிந்தி நடிகையான ஷில்பா ஷெட்டி, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், நகர காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் முன்னிலையில் அக்கட்சியில் ஷில்பா ஷெட்டி இணைந்தார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாட்டை பல ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி செய்துள்ளது. இதனால் அக்கட்சியில் சேர முடிவெடுத்தேன். தற்போது நாட்டுக்கு மாற்றம் தேவைப்படுகிறது. அந்த மாற்றத்தை காங்கிரஸால்தான் கொண்டு வர முடியும். நாட்டின் அடுத்த பிரதமராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவியேற்க வேண்டும் என்பதே எனது விருப்பம்' என்றார்.
ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனை கட்சியில் சேர இருப்பதாக வெளியான செய்திகள் குறித்த கேள்விக்கு, "நவநிர்மாண் சேனை கட்சி மராத்திய மக்கள் மீது மட்டுமே கவனம் செலுத்துகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி அப்படியல்ல. ஜாதி, மதம் அடிப்படையில் காங்கிரஸ் வேறுபாடு பார்ப்பதில்லை' என்று பதிலளித்தார்.
தேர்தலில் போட்டியிட விரும்புவதாக குறிப்பிட்ட ஷில்பா ஷெட்டி, அந்தத் தேர்தல், மக்களவைத் தேர்தலா, அல்லது சட்டப்பேரவைத் தேர்தலா என்பது குறித்து விளக்க மறுத்துவிட்டார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...