பாதுகாப்புத் தளவாட ஆலைகளில் ரூ.1.49 கோடி மட்டுமே அந்நிய முதலீடு
By DIN | Published On : 12th February 2019 04:55 AM | Last Updated : 12th February 2019 04:55 AM | அ+அ அ- |

பாதுகாப்புத் தளவாட ஆலைகளில் கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில், வெறும் ரூ.1.49 கோடி (0.21 மில்லியன் டாலர்) மட்டுமே அந்நிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மக்களவையில் மத்திய வர்த்தக மற்றும் தொழிற் துறை இணையமைச்சர் சி.ஆர். சௌதரி எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
2014-15ஆம் ஆண்டில் ரூ.56 லட்சமும், 2015-16ஆம் ஆண்டில் ரூ.71 லட்சமும், 2017-18ஆம் ஆண்டில் ரூ.7 லட்சமும் அந்நிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2016-17ஆம் ஆண்டில் அந்நிய நேரடி முதலீடு எதுவும் இல்லை. பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியா 70 சதவீத ஆயுத தளவாடங்களை இறக்குமதி செய்துள்ளது. 2018இல் ஏப்ரல்-செப்டம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில், நாட்டில் மொத்த அந்நிய நேரடி முதலீடு 11 சதவீதம் குறைந்துள்ளது என்றார் சி.ஆர். சௌதரி.