கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்க வேண்டும்: இபிசிஏ
By DIN | Published On : 04th January 2019 01:45 AM | Last Updated : 04th January 2019 01:45 AM | அ+அ அ- |

காற்றுமாசு பிரச்னை காரணமாக கனரக வாகனங்கள் நுழைவதற்கு சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை தடை விதிக்க வேண்டும் என சுற்றுச்சூழல் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் (இபிசிஏ) தில்லி அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஆணையத்தின் தலைவர் புரே லால் தில்லி தலைமைச் செயலர் விஜய் குமார் தேவுக்கு வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளார். அதில், தொடரும் காற்றுமாசு காரணமாக தில்லிக்குள் நுழையும் அத்தியாவசியப் பொருள்களை ஏற்றி வரும் லாரிகளைத் தவிர பிற லாரிகளுக்கு சனிக்கிழமை முதல் தடை விதிக்க வேண்டும். இந்த தடை ஜனவரி 4-ஆம் தேதி இரவு 11 மணி முதல் ஜனவரி 5-ஆம் தேதி நீட்டிக்க வேண்டும்.
இது தொடர்பான ஒருங்கிணைப்பை தேசியத் தலைநகர வலயப் பகுதிகளில் உள்ள மாநிலங்களுடன் தில்லி அரசு ஏற்படுத்த வேண்டும். இதுபோல, தனியார் வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கும் அறிவுறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட உத்தரவுகளை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.