கிழக்கு தில்லியில் 2 இளைஞர்கள் தூக்கிட்டுத் தற்கொலை
By DIN | Published On : 09th June 2019 11:59 PM | Last Updated : 09th June 2019 11:59 PM | அ+அ அ- |

கிழக்கு தில்லியில் வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு இளைஞர்கள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து தில்லி காவல் துறையினர் கூறியதாவது: கிழக்குத் தில்லி, பட்பர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீண் வர்மா (40). இவர், சனிக்கிழமை தனது அலுவலகத்தில் இருந்த மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இவரது உடல் அருகே தற்கொலைக்கான காரணத்தைத் தெரிவிக்கும் கடிதம் எழுதி வைக்கப்பட்டிருந்தது. அதில், அதிக கடன் சுமையின் காரணமாகதான் தற்கொலை முடிவை எடுத்ததாக பிரவீண் வர்மா குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக கிழக்கு தில்லி காவல் துணை ஆணையர் ஜஸ்மீத் சிங் தெரிவித்தார்.
மற்றொரு சம்பவம்: இதேபோன்று, கிழக்கு தில்லியில் நிகழ்ந்த மற்றொரு சம்பவத்தில், 32 வயது இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். மயூர் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் ஓட்டுநர் கணேஷ். தனது வீட்டில் இருந்த மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இவரது இறப்புக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.