தில்லியில் இன்று மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

மேற்குவங்க மாநிலத்தில் மருத்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து வேலைநிறுத்த போராட்டத்தில்

மேற்குவங்க மாநிலத்தில் மருத்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தில்லி மருத்துவர்கள் சங்கமும், எய்ம்ஸ் உள்ளுறை மருத்துவர் சங்கமும் முடிவு செய்துள்ளன.
மேங்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் மருத்துவர்கள் மீது நோயாளியின் உறவினர்கள் அண்மையில் தாக்குதல் நடத்தினர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மருத்துவர்கள் மீதான தாக்குதலைக் கண்டிக்கும் வகையில், தில்லியில் உள்ள மருத்துவர்கள் வியாழக்கிழமை (ஜூன் 13) கருப்பு தினமாக அனுசரிக்க வேண்டும் என தில்லி மருத்துவர் சங்கமும், இந்திய மருத்துவர்கள் சங்கமும் வேண்டுகோள் விடுத்திருந்தன. எய்ம்ஸ் உள்ளுறை மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் வியாழக்கிழமை நெற்றியில் கருப்புப் பட்டை அணித்து பணிபுரிந்தனர். 
வேலை நிறுத்தம்: இந்நிலையில், மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தில்லி மருத்துவர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இது குறித்து சங்கத்தின் தலைவர் கிரீஷ் தியாகி செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், "மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தில்லி மருத்துவர்கள் சங்கம் கண்டிக்கிறது. தாக்குதலில் பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுகிறது. மேலும், வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது' என்றார்.
எய்ம்ஸ் உள்ளுறை மருத்துவர்கள் சங்கம்: இதேபோல, எய்ம்ஸ் உள்ளுறை மருத்துவர்கள் சங்கமும் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது. இது குறித்து எய்ம்ஸ் உள்ளுறை மருத்துவர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், "மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் வேதனை அளிக்கிறது. தாக்குதலைக் கண்டிக்கும் வகையில், வெள்ளிக்கிழமை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com