"செளகிதார்' பாடல் விவகாரம் பாஜவுக்கு நோட்டீஸ்
By DIN | Published On : 28th March 2019 05:58 AM | Last Updated : 28th March 2019 05:58 AM | அ+அ அ- |

செளகிதார் பாடல் விவகாரம் தொடர்பாக பாஜவுக்கு தில்லி தலைமை தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அளித்து உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தில்லி தலைமை தேர்தல் அதிகாரி புதன்கிழமை தெரிவித்துள்ளதாவது: "மை பி செளகிதார்' என்ற விளம்பரப் பாடல் சமூக வலைத்தளங்களில் முறையான அனுமதி இல்லாமல் பகிரப்பட்டுள்ளது.
இது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் உள்ளது. இது தொடர்பாக பாஜகவின் தேசிய தேர்தல் குழு உறுப்பினர் நீரஜ் 3 நாள்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் எனஉத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...