டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு தில்லி முதல்வர் பாராட்டு
By DIN | Published On : 28th March 2019 05:57 AM | Last Updated : 28th March 2019 05:57 AM | அ+அ அ- |

மிஷன் சக்தி என்ற பெயரில் ஏசாட் தொழில்நுட்பத்தின் மூலம் வின்வெளியில் செயற்கைக் கோளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்திய இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) விஞ்ஞானிகளுக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சட்டுரையில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், "டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு மீண்டும் ஒருமுறை பாராட்டுகள்.
ஏசாட் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பரிசோதித்திருப்பதன் மூலம் மொத்த அறிவியல் சமூகமே மேலும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...