தில்லி முத்தமிழ் பேரவை சார்பில் இன்று வசந்த் உத்ஸவ் விழா
By DIN | Published On : 30th March 2019 11:57 PM | Last Updated : 30th March 2019 11:57 PM | அ+அ அ- |

தில்லி முத்தமிழ் பேரவை சார்பில் வசந்த் உத்ஸவ் என்ற தலைப்பில் இசை மற்றும் நடன விழா, லோக் கலா மஞ்சில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) நடைபெறுகிறது.
அன்று காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த விழாவில், ஆதர்ஷ், அனகா ஆகியோர் வழங்கும் கர்நாடக வாய்ப்பாட்டு, வெற்றிபூபதி மாணவர்களின் தாளபிரம்மம், மீனா தாகுர் குழுவினரின் குச்சுப்புடி நடனம் ஆகியவை இடம் பெறவுள்ளன.
விழாவையொட்டி, சங்கீத நாடக அகாதெமி விருது பெற்ற பரதக் கலைஞர் ரமா வைத்தியநாதனுக்கு தில்லி முத்தமிழ்ப் பேரவை சார்பில் பாராட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை தில்லி முத்தமிழ்ப் பேரவையின் தலைவர் சரோஜா வைத்தியநாதன், பொதுச் செயலாளர் என்.கண்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...