தொழில்நுட்பக் கோளாறு: மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு
By DIN | Published On : 15th May 2019 07:04 AM | Last Updated : 15th May 2019 07:04 AM | அ+அ அ- |

தில்லி மெட்ரோ ஒருங்கிணைப்பில் சங்கர் விஹார் மற்றும் ஐஜிஐ ஏர்போர்ட் முனையம் -1 பிரிவு இடையே தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெஜந்தா வழித்தடத்தில் செவ்வாய்க்கிழமை மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆர்சி) மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: தில்லி மெட்ரோ ரயில் வழித்தடத்தில் 34.2 கிலோ மீட்டர் தொலைவிலான மெஜந்தா வழித்தடம் பொட்டானிகல் கார்டன் மற்றும் ஜனக்புரி மேற்கு ரயில் நிலையங்களை இணைக்கிறது. இந்த வழித்தடத்தில் சங்கர் விஹார் மற்றும் ஐஜிஐ ஏர்போர்ட் முனையம்-1 இடையே உள்ள பிரிவில் செவ்வாய்க்கிழமை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், ரயில்கள் கட்டுப்படுத்தப்பட்ட வேகத்தில் ரயில்கள் அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டன.
இதன் காரணமாக, பல ரயில்களின் சேவை பிற வழித்தடத்தங்களில் பாதிக்கப்பட்டது. கட்டுப்படுத்தப்பட்ட வேகமானது மணிக்கு சுமார் 30 கிலோ மீட்டராகும். ரயில்கள் வழக்கமாக மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகின்றன என்றார் அந்த அதிகாரி.