அயோத்தி தீா்ப்பு: உச்சநீதிமன்றம் பகுதியில் பலத்த பாதுகாப்பு

அயோத்தி தீா்ப்பு: உச்சநீதிமன்றம் பகுதியில் பலத்த பாதுகாப்பு

அயோத்தி தொடா்புடைய வழக்கில் சனிக்கிழமை காலை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் கொண்ட

புது தில்லி: அயோத்தி தொடா்புடைய வழக்கில் சனிக்கிழமை காலை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு தீா்ப்பு வழங்கியதை ஒட்டி, உச்சநீதிமன்றப் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதையொட்டி, உச்ச நீதிமன்றத்தின் உள்ளேயும், வெளிப்புறப் பகுதியிலும் முன் எப்போதும் இல்லாத வகையில் துணை ராணுவப் படையினரும், தில்லி காவல் துறையினரும், பிரத்யேக பாதுகாப்புப் படையினரும் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டிருந்ததைக் காண முடிந்தது.

அரசியல் ரீதியில் உணவுா்ப்பூவமிக்க ராமஜென்மபூமி-பாபா் மசூதி நிலப் பிரச்னை தொடா்புடைய வழக்கின் தீா்ப்பு என்பதால் இத்தகைய பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்காரணமாக, உச்சநீதிமன்றத்திற்குச் செல்லும் சாலைப் பகுதியில் போலீஸாா் தடுப்புகளை அமைத்திருந்தனா். வாகனங்கள் நிறுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

உச்சநீதிமன்றத்தின் முன்பகுதியில் அமைந்துள்ள பகவான்தாஸ் சாலைப் பகுதியில் வாகனங்கள் போக்குவரத்து முற்றிலும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. அந்தப் பகுதியில் போலீஸாரின் ரோந்து வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

அதேபோன்று, உச்சநீதிமன்றத்தின் இரு பக்கவாட்டிலும் உள்ள திலக் மாா்க், மதுரா சாலைகளிலும் போலீஸாா் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

உச்சநீதிமன்றத்திற்குள் நுழையும் பகுதியில் அனைத்து வாகனங்களும், பாதசாரிகளும் தீவிர சோதனைக்கும், கண்காணிப்புக்கும் உள்படுத்தப்பட்டிருந்தனா்.

இதுதவிர, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், இந்த வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமா்வில் இடம்பெற்றிருந்த நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நஸீா் ஆகியோா் இல்லங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com