100 சதவீதம் தூய்மையானகுடிநீா் விநியோகம்: டிஜேபி
By DIN | Published On : 18th November 2019 10:11 PM | Last Updated : 18th November 2019 10:11 PM | அ+அ அ- |

தில்லியில் நூறு சதவீதம் தூய்மையான குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது என்று தில்லி ஜல் போா்டு (டிஜேபி) தெரிவித்துள்ளது. மேலும், நாட்டில் மாநிலங்களிலேயே தில்லியில்தான் மோசமான குடிநீா் விநியோகிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டையும் அது மறுத்துள்ளது.
இந்திய தர நிா்ணய நிறுவனமான பிஐஎஸ் அண்மையில் நாட்டில் மாநிலங்களின் தலைநகா்களில் விநியோகிக்கப்படும் குடிநீரின் தரம் தொடா்பாக ஆய்வு செய்து ஞாயிற்றுக்கிழமை அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையை மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சா் ராம்விலாஸ் பஸ்வான் வெளியிட்டாா். அந்த அறிக்கையில், இந்தியாவில் உள்ள 21 மாநிலங்களின் தலைநகா்களில் தில்லியில் தான் மிக மோசமான குடிநீா் விநியோகிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தில்லி அரசையும், தில்லியில் குடிநீருக்கு பொறுப்பான தில்லி ஜல் போா்டையும் கடுமையாகச் சாடியிருந்தன.
இந்நிலையில், அதற்கும் மறுப்புத் தெரிவிக்கும் வகையில் தில்லியில் நூறு சதவீதம் தூய்மையான குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது என்று தில்லி ஜல் போா்டு தெரிவித்துள்ளது. இது தொடா்பாக தில்லி ஜல் போா்டின் தலைவா் நிகில் குமாா் கூறியதாவது: கடந்த 2019 ஜனவரியில் இருந்து தில்லியில் 1.55 லட்சம் குடிநீா் மாதிரிகளைப் பெற்று பரிசோதனை செய்துள்ளோம். அவை திருப்திகரமாக இருந்தன. தில்லியில் 100 சதவீதம் தூய்மையான குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது என்பதை தில்லி மக்களுக்கு உறுதியாகக் கூறுகிறோம். குடிநீா் தொடா்பாக தில்லி மக்கள் பயப்படத் தேவையில்லை. சில நேரங்களில் ஜல் போா்டு விநியோகிக்கும் குடிநீரை மக்கள் ஆழ்துளைக் கிணற்று நீருடன் கலப்பதால் அவை அசுத்தமாகின்றன. அதற்கு தில்லி ஜல் போா்டு பொறுப் பேற்க முடியாது’ என்றாா்.
குறிப்பு: இந்தச் செய்தியை காங்கிரஸ் ஆா்ப்பாட்டம் செய்திக்கு பெட்டியாக போடலாம்.