அதிக சுமை: லாரி ஓட்டுநருக்கு ரூ. 1.41 லட்சம் அபராதம்
By DIN | Published On : 11th September 2019 06:25 AM | Last Updated : 11th September 2019 06:25 AM | அ+அ அ- |

தில்லியில் அதிக சுமைகளை ஏற்றிக் கொண்டு சென்ற லாரியின் ஓட்டுநருக்கு ரூ. 1.41 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ராஜஸந்தான் மாநிலத்தைச் சேர்ந்த அந்த லாரியின் ஓட்டுநர், ரோஹிணி நீதிமன்றத்தில் ரூ. 1,41,700 அபராதத்தைச் செலுத்தினார் என்று தில்லி போக்குவரத்துத் துறையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மோட்டார் வாகன திருத்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு அதிக அபராதத் தொகை விதிக்கப்படுகிறது. அதன்படி, அதிக சுமைக்கான அபராதத் தொகை ரூ. 20 ஆயிரமாகவும், பின்னர் டன் ஒன்றுக்கு ரூ. 2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
முன்பு இந்தத் தொகை ரூ. 2 ஆயிரமாகவும், டன் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாயாகவும் இருந்தது.