அறிவியல் கண்காட்சிப் போட்டியில் டிடிஇஏ பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்
By DIN | Published On : 11th September 2019 06:26 AM | Last Updated : 11th September 2019 06:26 AM | அ+அ அ- |

தில்லி கல்வி இயக்ககத்தின் அறிவியல் பிரிவு சார்பில் அண்மையில் நடைபெற் மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சிப் போட்டியில் தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர். இவர்களையும், இவர்களுக்கு வழிகாட்டிகளாக செயல்பட்ட ஆசிரியர்களையும் டிடிஇஏ செயலர் ஆர்.ராஜு பாராட்டினார்.
மண்டலம் 19: மண்டலம் 19 -க்குள்பட்ட பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற அறிவியல் கண்காட்சிப் போட்டியில் லக்ஷ்மிபாய் நகர்ப் பள்ளி மாணவர்கள் கிருஷ்ணா செளஹான், கெளரவ் சந்த் (5-ஆம் வகுப்பு) முதல் பரிசு, நடுநிலைப் பிரிவில் மாணவர் அனுஷ்கா நாயர் (7-ஆம் வகுப்பு), பிரியா (8-ஆம் வகுப்பு) ஆகியோர் இரண்டாம் பரிசு பெற்றனர். மேனிலைப் பிரிவில் மாணவர்கள் சிவ நாராயண், ராகில் சியானி, சிவம் சக்ஸேனா, ஹர்ஷ் ஜா (11-ஆம் வகுப்பு ) ஆகியோர் முதல் பரிசும், வினித் குமார் நிகில் குப்தா ஆகியோர் இரண்டாம் பரிசும் பெற்றனர். உயர்நிலைப் பிரிவில் அபர்ணா, சக்திவேல் (9-ஆம் வகுப்பு) முதல் பரிசு பெற்றனர். அறிவியல் வினாடி- வினா போட்டியில் குஷால் குமார், சூர்யா, சிநேகா (12-ஆம் வகுப்பு) ஆகியோர் மூன்றாம் பரிசு பெற்றனர்.
அறிவியல் கருத்தரங்கம் போட்டியில் மோதிபாக் பள்ளி மாணவி மேகனா (9-ஆம் வகுப்பு), லக்ஷ்மிபாய் நகர்ப் பள்ளி மாணவி அபர்ணா (9-ஆம் வகுப்பு) ஆகியோர் மூன்றாம் பரிசு பெற்றனர். அறிவியல் காங்கிரஸ் போட்டியில் ஜூனியர் பிரிவில் மோதிபாக் பள்ளியைச் சேர்ந்த சுமித், நவிதா நாதன் (8-ஆம் வகுப்பு), முதுநிலைப் பிரிவில் உத்கர்ஸ், உத்சவ் (10-ஆம் வகுப்பு) ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். அறிவியல் கண்காட்சியில் கும் கும் (11- ஆம் வகுப்பு), மேகனா (9-ஆம் வகுப்பு) ஆகியோர் மூன்றாம் பரிசும், தொடக்க நிலைப் பிரிவில் ஆர்யன், ஐஸ்வர்யா ஆகியோர் இரண்டாம் பரிசும் பெற்றனர்.
முதுநிலைப் பிரிவில் ராமகிருஷ்ணபுரம் டிடிஇஏ பள்ளியின் சன்ஸார் சிங், ஹேமந்த் குமார் ( 11 ஆம் வகுப்பு) ஆகியோர் முதல் பரிசு, மான்வி கெளதம், தான்யா ரெளதன் (11ஆம் வகுப்பு) ஆகியோர் இரண்டாம் பரிசு பெற்றனர். உயர்நிலைப் பிரிவில் சிவம் உபாத்யாய, மோஹம்மத் பார்மன் மன்சூரி (10-ஆம் வகுப்பு) இரண்டாம் பரிசு பெற்றனர். நடுநிலைப் பிரிவில் மாணவர் ஹரீஷ் (8-ஆம் வகுப்பு ) முதல் பரிசு பெற்றார்.
மண்டலம் 28: மண்டலம் 28-க்குள்பட்ட பள்ளிகளுக்கிடையேயான போட்டியில் பூசா சாலை டிடிஇஏ பள்ளியின் கர்விதா ( 5-ஆம் வகுப்பு) வாசகம் எழுதும் போட்டியில் முதல் பரிசும், சுவரொட்டி தயாரிக்கும் போட்டியில் பாஸ்கர் இரண்டாம் பரிசும் பெற்றனர். மேலும், அறிவியல் மாதிரியைக் காட்சிப்படுத்தியதில் பவ்யா, பாஸ்கர் (5-ஆம் வகுப்பு) ஆகியோரும், ஜோதி, சான்யா (11ஆம் வகுப்பு) ஆகியோரும் நான்காம் பரிசு பெற்றனர்.
மண்டலம் எண் 18: மண்டலம்18-இல் உள்ள பள்ளிகளுக்கிடையேயான போட்டியில் ஜனக்புரி டிடிஇஏ பள்ளி மாணவர்கள் அன்ஷ் பாசின், பரியான்ஷனி சர்மா (5-ஆம் வகுப்பு) ஆகியோர் மூன்றாம் பரிசு பெற்றனர்.
மண்டலம் எண் 26: மண்டலம் 26-இல் உள்ள பள்ளிகளுக்கிடையேயான அறிவியல் கண்காட்சிப் போட்டியில் லோதி எஸ்டேட் டிடிடிஏ பள்ளி மாணவர்கள் ஆதித்யா சர்மா, வைபவ் கோலி (9-ஆம் வகுப்பு) ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். மேனிலைப் பிரிவில் மாதிரியைக் காட்சிப்படுத்தும் போட்டியில் ஹர்ஷ், பிரதீப் (12- ஆம் வகுப்பு) முதல் பரிசு பெற்றனர். பிரேமா சசி குமார் (11-ஆம் வகுப்பு), வினோதினி( 12 -ஆம் வகுப்பு ) இரண்டாம் பரிசு பெற்றனர். மந்திர்மார்க் பள்ளி மாணவிகள் சிருஷ்டி, மான்சா ( 9-ஆம் வகுப்பு) மூன்றாம் பரிசு பெற்றனர். அறிவியல் சொற்போர் போட்டியில் சாமுவேல் (12-ஆம் வகுப்பு) முதல் பரிசு பெற்றார்.