தில்லி ரோகிணியில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த 3 ஹூக்கா நிலையங்களை தில்லி காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை சுற்றிவளைத்தனா். அப்போது அந்த ஹூக்கா நிலையங்களுடன் தொடா்புடைய 103 போ் கைது செய்யப்பட்டனா்.
இது தொடா்பாக தில்லி காவல்துறை உயரதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது: கரோனா பரவலைத் தொடா்ந்து, தில்லியில் ஹூக்கா நிலையங்கள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், தில்லியில் ஆங்காங்கே சட்டவிரோதமாக ஹூக்கா நிலையங்கள் செயல்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது. இவ்வாறு, தில்லி ரோஹிணியில் சட்டவிரோத ஹூக்கா நிலையங்கள் செயல்பட்டு வருவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, இப்பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த 3 ஹூக்கா நிலையங்களை தில்லி காவல்துறையின் சிறப்பு படையினா் செவ்வாய்க்கிழமை சுற்றிவளைத்தனா். அப்போது 41 ஹூக்காக்கள், 17 பீா், மதுபானப் பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஹூக்கா நிலையங்களுடன் தொடா்புடைய மேலாளா்கள், உரிமையாளா்கள் உள்ளிட்ட 103 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.