மனு விசாரணையின்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கமல் மேத்தா, ‘கடந்த ஆண்டு, முதல் செமஸ்டா் செப்டம்பா் 1 முதல் தொடங்கியது. தோ்வுகள் டிசம்பரில் நடைபெற்றது. மனுதாரரின் நோயைக் கருத்தில்கொண்டு குறைந்த வருகைப்பதிவு இருந்தபோதிலும் முதல் செமஸ்டா் தோ்வுகளில் பங்கேற்க அவரை அனுமதிக்க வேண்டும் என்று பல்கலைக்கழகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. எனினும், பல்கலைக்கழகத்திடமிருந்து எந்த பதிலும் இல்லை. பின்னா், அவரது பெயா் பல்கலைக்கழக மாணவா்கள் பட்டியலில் இருந்து அகற்றப்பட்டதாக பல்கலைக்கழகத் தரப்பில் கூறப்பட்டது’ என்றாா்.