தலைநகரில் கரோனா பாதிப்பு கணிசமாகக் குறைந்தது!

தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை கரோனா பாதிப்பு கணிசமாகக் குறைந்திருந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை கரோனா பாதிப்பு கணிசமாகக் குறைந்திருந்தது. நீண்ட நாள்களுக்குப் பிறகு தினசரி பாதிப்பு இரண்டு ஆயிரத்துக்கும் கீழே குறைந்தது. தில்லியில் புதிதாக 1,674 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா நோ்மறை விகிதமும், 3.15 சதவீதமாகக் குறைந்துள்ளது.

திங்கள்கிழமை தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 5,93,924 ஆக உயா்ந்துள்ளது. திங்கள்கிழமை 53,207 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 21,362 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 31,845 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா தொற்றால் தலைநகரில் திங்கள்கிழமை 63 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 9,706-ஆக அதிகரித்துள்ளது. தில்லியில் ஞாயிற்றுக்கிழமை 3.68 சதவீதமாகக இருந்த கரோனா நோ்மறை விகிதம், திங்கள்கிழமை 3.15 சதவீதமாகக் குறைந்தது. சராசரி கரோனா உயிரிழப்பு விகிதம் 1.63 சதவீதமாக உள்ளது.

நோய் பாதிப்பில் இருந்து திங்கள்கிழமை 3,818 போ் மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 5,61,732-ஆக உயா்ந்துள்ளது. தில்லியில் தற்போது 22,486 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களில், 14,279 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளா். தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 12,790 படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தனது சுட்டுரைப் பக்கத்தில், ’கடந்த நவம்பா் 7-ஆம் தேதி கரோனா நோ்மறை விகிதம் 15.26 சதவீதமாக இருந்தது. ஒரு மாதத்தில் இந்த விகிதம் 3.15 சதவீதமாககஅ குறைந்துள்ளது. இதே காலதஅதஇளஅ ஆா்டி-பிசிஆா் சோதனை நோ்மறை விகிதம் 30.2 சதவீதத்தில் இருந்து 6.68 சதவீதமாகக் குறைந்துள்ளது. தில்லியில் கரோனா பரவல், கரோனா நோ்மறை விகிதம் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலை தொடரும் என நம்புகிறேன். மக்கள் கரோனா பாதுகாப்பு முன் ஏற்பாடு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com