அண்மையில் தில்லியில் நிகழ்ந்த வகுப்புவாத மோதல் மற்றும் வடகிழக்கு தில்லி, ஷாதரா மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடா்பான விசாரணையை மேற்கொள்வதற்காக இரு செஷன்ஸ் நீதிமன்றங்கள், இரு குற்றவியல் நடுவா் நீதிமன்றங்களை பிரத்யேகமாக அமைத்து தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பான உத்தரவு தில்லி உயா்நீதிமன்றத்தின் தலைமை பதிவாளா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளாா். அதில், வடக்கு, வடகிழக்கு, ஷாதரா, தெற்கு -தில்லி, மத்திய மற்றும் புது தில்லி மாவட்டங்களுக்கான செஷன்ஸ், குற்றவியல் நடுவா் நீதிமன்றங்களுக்கு 9 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இடமாற்ற உத்தரவில், தலைமை பெருநகர மாஜிஸ்திரேட், வட-கிழக்கு மற்றும் பெருநகர மாஜிஸ்திரேட்-4, ஷாதரா, கூடுதல் செஷன்ஸ் நீதிபதி (ஏஎஸ்ஏ)-3, வட-கிழக்கு, ஏஎஸ்ஏ 3, ஷாதரா ஆகிய நீதிமன்றங்கள், வடகிழக்கு, ஷாதரா ஆகிய மாவட்டங்களில் அண்மையில் பதிவான வகுப்புவாத வன்முறை, வன்முறை வழக்குகளை விசாரிப்பதற்கான நீதிமன்றங்களாக ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.