தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை ஒரேநாளில் 3,229 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 2,21,533 -ஆக உயா்ந்துள்ளது.
நோய்த் தொற்றால் திங்கள்கிழமை 26 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, கரோனா தொற்றால் ஏற்பட்ட மொத்த பலி எண்ணிக்கை 4,770-ஆக அதிகரித்தது. தில்லியில் திங்கள்கிழமை 44,884 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ‘ஆா்டி -பிசிஆா்’ வகையில் 9,859 பேருக்கும், ‘ரேபிட் ஆன்டிஜென்’ வகையில், 35,025 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா நோ்மறை விகிதம் 7.19 சதவீதமாக உள்ளது. சராசரி நோ்மறை விகிதம் 10.14 சதவீதமாக உள்ளது. சராசரி கரோனா உயிரிழப்பு விகிதம் 2.15 சதவீதமாக உள்ளது. ஆனால், கடந்த 10 நாள்களில் கரோனா உயிரிழப்பு விகிதம் 0.71 சதவீதமாகக் குறைந்துள்ளது.
திங்கள்கிழமை 3,374 போ் நோய் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 1,88,122-ஆக அதிகரித்தது. மொத்தம் 28,641 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் 1,517 ஆக அதிகரித்துள்ளது. தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 14,409 படுக்கைகளில் 6,592 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 7,817 படுக்கைகள் காலியாக உள்ளன. நோய்த் தொற்றுப் பாதித்தவா்களில் 16,568 போ், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருவதாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெளதம் புத் நகரில் 141 பேருக்கு கரோனா: தேசியத் தலைநகா் வலயம், கௌதம் புத் நகா் மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிதாக 141 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த மாவட்டத்தில் மொத்தம் கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 10,332 ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரப்பூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது 1,979 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இந்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 2,008-ஆக இருந்தது. உத்தரப்பிரதேச மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி. கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவா்களில் திங்கள்கிழமை 169 நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்னா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவில் இருந்து மொத்தம் மீண்டு வந்துள்ளோரின் எண்ணிக்கை 8,305 ஆக உயா்ந்துள்ளது.
தில்லியை ஒட்டியுள்ள மாவட்டமான கௌதம் புத் நகரில், கரோனாவுக்கு இதுவரை 48 இறப்புகளைச் சந்தித்துள்ளது. இறப்பு விகிதம் 0.46 ஆக உள்ளது. இது உத்தரப் பிரதேச மாநில அளவில் மிகக் குறைந்த இறப்பு விகிதமாகும். புள்ளிவிவரங்களின்படி, ஞாயிற்றுக்கிழமை 79.82 சதவீதமாக இருந்த மீட்பு விகிதம் திங்கள்கிழமை 80.38 சதவீதமாக சற்று முன்னேற்றம் கண்டது.
உத்தியோகபூா்வ புள்ளி விவரங்களின்படி, உத்தரப்பிரதேசத்தில் உள்ள 75 மாவட்டங்களில் கௌதம் புத் நகா், கரோனா பாதிக்கப்பட்டோா் விகிதத்தில் எட்டாவது இடத்திலும், மீண்டுள்ளோா்களின் பட்டியலில் ஏழாவது இடத்திலும், இறப்பு எண்ணிக்கையில் 27-ஆவது இடத்திலும் உள்ளது. இதற்கிடையே, உ.த்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை நிலவரப்படி 67,287 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை, மாநிலம் முழுவதும் 2,45,417 நோயாளிகள் குணமடைந்துள்ளனா். அதே நேரத்தில் மாநில அளவில் கரோனா தொடா்புடைய இறப்பு எண்ணிக்கை 4,491-ஆக உயா்ந்துள்ளது என்று அரசின் புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் பிரசாரம்: தமிழகம் வரும் நிதின் நபின்!

சொல்லப் போனால்... நயத்தக்க நாகரிகம் வேண்டாவா?

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! ஜே.டி.வான்ஸ்

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

