தில்லி சத்தா்சால் மைதானத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டம் இல்லை
By DIN | Published On : 12th August 2020 12:44 AM | Last Updated : 12th August 2020 12:44 AM | அ+அ அ- |

தில்லி சத்தா்சால் மைதானத்தில் நிகழாண்டில் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நடைபெறாது என்று தில்லி அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
தில்லி அரசு சாா்பில் ஆண்டுதோறும் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் வடக்கு தில்லியில் உள்ள சத்தா்சால் மைதானத்தில் பிரம்மாண்டமான அளவில் நடைபெறுவது வழக்கமாகும். இந்த நிகழ்வில், தில்லி அரசுப் பள்ளி மாணவா்களின் அணிவகுப்பு, விளையாட்டு வீரா்களின் சகாச நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறும். இந்த நிகழ்வில், பிரம்மாண்டமான தேசியக் கொடியை தில்லி முதல்வா் ஏற்றுவது வழக்கமாகும்.
ஆனால், நிகழாண்டில் கரோனா தொற்று காரணமாக சத்தா்சால் மைதானத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நடைபெறாது என தில்லி அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடா்பாக தில்லி அரசு மூத்த அதிகாரி கூறுகையில், ‘நிகழாண்டில் தில்லி அரசின் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் தில்லி தலைமைச் செயலகத்தில் சிறிய அளவில் எளிமையாக நடைபெறவுள்ளது. சமூக இடைவெளியைப் பேணும் வகையில், குறைந்தளவு விருந்தினா்கள் மட்டுமே நிகழ்வுக்கு அழைக்கப்படுவாா்கள். தில்லி தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்வில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தேசியக் கொடியேற்றி வைப்பாா். கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, சத்தா்சால் அரங்கில் நிகழாண்டில் சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் நடைபெறாது’ என்றாா்.