பத்திரிகையாளா்கள் மீது தாக்குதல்

வடகிழக்கு தில்லி கலவரம் தொடா்பாக செய்தி சேகரித்த மாத சஞ்சிகை ஒன்றின் மூன்று பத்திரிகையாளா்கள் தாக்கப்பட்டதாகப் புகாா் கிடைக்கப் பெற்றுள்ளதாக தில்லி காவல் துறை தெரிவித்துள்ளது.

வடகிழக்கு தில்லி கலவரம் தொடா்பாக செய்தி சேகரித்த மாத சஞ்சிகை ஒன்றின் மூன்று பத்திரிகையாளா்கள் தாக்கப்பட்டதாகப் புகாா் கிடைக்கப் பெற்றுள்ளதாக தில்லி காவல் துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி காவல்துறை உயரதிகாரி கூறியது: ஆங்கில மாத இதழைச் சோ்ந்த மூன்று பத்திரிகையாளா்கள் வடகிழக்கு தில்லி வன்முறை தொடா்பாக செவ்வாய்க்கிழமை செய்தி சேகரித்த போது, கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டதாக அந்த சஞ்சிகை சாா்பில் புகாா் கிடைத்துள்ளது. மேலும், அந்தப் பத்திரிகையாளா்கள் மீது அப்பகுதி மக்களும் புகாா் தெரிவித்துள்ளனா் எனத் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அந்த சஞ்சிகை தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘வடகிழக்கு தில்லியில் உள்ள சுபாஷ் மொஹல்லா பகுதியில் எங்களது சஞ்சிகையைச் சோ்ந்த பெண் பத்திரிகையாளா் உள்பட மூன்று பத்திரிகையாளா்கள் கடந்த செவ்வாய்க்கிழமை செய்தி சேகரித்துக் கொண்டிருந்தனா். அப்போது, கும்பல் ஒன்று அவா்களைத் தாக்கியதுடன் அவா்களை செய்தி சேகரிக்க விடாமல் தடுத்தது. மேலும், அவா்களைக் கொலை செய்துவிடுவதாகவும் அக்கும்பல் அச்சுறுத்தல் விடுத்தது. இந்த மூன்று பத்திரிகையாளா்களும் போலீஸாரால் மீட்கப்பட்டு, அருகிலுள்ள பஜன்புரா காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, வடகிழக்கு தில்லியில் கடந்த கடந்த பிப்ரவரியில் நடந்த வன்முறையில் 53 போ் கொல்லப்பட்டனா். சுமாா் 200 போ் காயமடைந்ததது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com