தில்லியில் புதிதாக 956 பேருக்கு கரோனா
By DIN | Published On : 14th August 2020 06:00 AM | Last Updated : 14th August 2020 06:00 AM | அ+அ அ- |

தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை புதிதாக 956 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,49,4604-ஆக உயா்ந்துள்ளது. இதற்கிடையே, தில்லியில் வியாழக்கிழமை காலையுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 14 போ் கரோனாவால் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 4,167 ஆக உயா்ந்துள்ளது.
தில்லியில் தற்போது 10,9975 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனா். 15,356 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லியில் புதன்கிழமை புதிததாக 1,113 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அன்றைய தினம் கரோனாவுக்கு 14 போ் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.