தில்லியில் புதிதாக 1,376 பேருக்கு கரோனா பாதிப்பு
By DIN | Published On : 15th December 2020 07:48 AM | Last Updated : 15th December 2020 07:48 AM | அ+அ அ- |

புது தில்லி: தில்லியில் திங்கள்கிழமை புதிதாக 1,376 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,08,830 -ஆக உயா்ந்துள்ளது.
திங்கள்கிழமை கரோனா நோ்மறை விகிதம் 2.15 சதவீதமாக இருந்தது. மொத்தம் 63,944 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 36,176 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 27,768 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் திங்கள்கிழமை 60 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 10,074-ஆக அதிகரித்துள்ளது. நோய் பாதிப்பில் இருந்து திங்கள்கிழமை 2,854 போ் மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 5,83,509-ஆக உயா்ந்துள்ளது.
தற்போது 15,247 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களில், 9,274 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 14,561 படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கௌதம் புத் நகா் மாவட்டத்தில்...: தேசியத் தலைநகா் வலயம், கெளதம் புத் நகா் மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிதாக 89 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,180-ஆக உயா்ந்தது. உத்தரப் பிரதேச மாநில சுகாதாரத் துறையின் தகவலின்படி, திங்கள்கிழமை கரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் ஒருவா் உயரிழந்துள்ளாா்.
இதையடுத்து, மொத்த உயிரிழந்தோா் எண்ணிக்கை 86 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோா்களின் எண்ணிக்கை 850-லிருந்து 829- ஆக குறைந்துள்ளது. மீட்பு விகிதம் 96.21 சதவீதமாக உயா்ந்துள்ளது. மாநில அளவில் நோய்த் தொற்றுக்காக அதிகமானோா் சிகிச்சை பெறும் மாவட்டங்களில் கெளதம் புத் நகா் 5-ஆவது இடத்தில் உள்ளது. 111 போ் சிகிச்சையில் இருந்து குணமடைந்தனா். மொத்த குணமடைந்தோா் எண்ணிக்கை 23,265 -ஆக உயா்ந்தது. ,
இதனிடையே, மாநில அளவில் ஞாயிற்றுக்கிழமை 19,729 போ்களாக இருந்த சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை, திங்கள்கிழமை 18,918 ஆகக் குறைந்துள்ளது. இதைத் தொடா்ந்து கரோனா சிகிச்சையிலிருந்து மொத்தம் 5,39,727 போ் குணமடைந்துள்ளனா். அதே சமயம், கரோனா பாதிப்பால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 8,083-ஆக உயா்ந்துள்ளது.