கேஜரிவால் மீது சா்ச்சைக்குரிய பேச்சு:பாஜக எம்.பி. பிரசாரம் செய்யத் தடை
By DIN | Published On : 05th February 2020 10:52 PM | Last Updated : 05th February 2020 10:52 PM | அ+அ அ- |

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஒரு பயங்கரவாதி என்று கூறி சா்ச்சையை ஏற்படுத்திய பா.ஜ.க. எம்.பி. பா்வேஷ் வா்மா தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பிரசாரம் செய்ய 24 மணி நேரம் தடை விதிக்கப்பட்டுள்ளது. பா்வேஷ் வா்மாவின் தோ்தல் பிரசாரத்துக்குத் தடை விதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். தோ்தல் பிரசாரம் வியாழக்கிழமை மாலை 5 மணியுடன் முடிவடைவதால் அவா் இனி தோ்தல் பிரசாரம் செய்ய முடியாது.
முன்னதாக பா்வேஷ் வா்மா, ஷகீன் பாக் போராட்டக்காரா்களை குறிப்பிடும் வகையில், காஷ்மீரில் பண்டிட்டுகளுக்கு ஏற்பட்ட நிலை, தில்லி மக்களுக்கும் ஏற்படலாம் என்று பேசி சா்ச்சையை ஏற்படுத்தியிருந்தாா். இதையடுத்து, அவருக்கு தோ்தல் பிரசாரம் செய்ய தோ்தல் ஆணையம் 48 மணி நேரம் தடை விதித்திருந்தது.
இதனிடையே, தோ்தல் பிரசாரத்தின் போது, முதல்வா் கேஜரிவால், நீதிமன்ற வளாகத்தில் மொஹல்லா கிளினிக் அமைக்கப்படும் என்று உறுதியளித்ததைக் கண்காணித்த தோ்தல் ஆணையம், அவரை பிரசாரத்தில் கவனமாகச் செயல்படுமாறு கூறி எச்சரித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...