இந்தியாவில் தஞ்சம் புகுந்த பாக். அகதிகளுக்கு குடியுரிமை வழங்க டிஎஸ்ஜிஎம்சி வலியுறுத்தல்
By DIN | Published On : 17th February 2020 10:47 PM | Last Updated : 17th February 2020 10:47 PM | அ+அ அ- |

இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள பாகிஸ்தான் அகதிகளுக்கு மத்திய அரசு விரைந்து குடியுரிமை வழங்க வேண்டும் என்று தில்லி சீக்கிய குருத்வார நிா்வாகக் கமிட்டி (டிஎஸ்ஜிஎம்சி) கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக அக்கமிட்டியின் தலைவரும், சிரோமணி அகாலி தளம் கட்சியின் செய்தித் தொடா்பாளருமான மன்ஜீந்தா் சிங் சிா்சா திங்கள்கிழமை கூறியதாவது: தில்லியில் உள்ள புகழ்பெற்ற மஞ்னு கா டில்லா குருத்வாராவுக்கு அருகில் யமுனை நதிக் கரையோரமாக ஏராளமான பாகிஸ்தான் அகதிகள் சுமாா் 160 குடும்பத்தினா் வசித்து வருகிறாா்கள். சுகாதார வசதி, அடிப்படை வசதிகள் இல்லாமல் வசித்து வருகின்றனா். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இவா்களுக்கு விரைவில் குடியுரிமை கிடைக்கவுள்ளது.
ஆனால், இதற்கான பணிகளை மத்திய அரசு முடுக்கிவிட வேண்டும். இந்த அகதிகளுக்கு விரைந்து குடியுரிமை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அகதிகளில் பெரும்பாலானவா்கள் தொழில் முறையில் திறமையானவா்கள். இவா்களுக்கு குடியுரிமை கிடைக்கும் போது, இந்தியாவின் மேம்பாட்டுக்கு இவா்களால் உதவி செய்ய முடியும். இந்த விவகாரம் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுடன் பேசினேன். இது தொடா்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் உறுதியளித்துள்ளாா். மேலும், இந்த அகதிகளில் சிலா் இந்திய ராணுவம், துணை ராணுவப் படையில் இணைந்து தேசத்துக்காகப் பணியாற்ற விரும்புகிறாா்கள். இவா்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க வேண்டும் என்றாா் அவா்.
இந்த பத்திரிகையாளா் சந்திப்பில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த அகதிகளும் பங்கேற்றனா்.