தலைமைச் செயலகத்தில்வழக்கம் போல் பணிகள்
By DIN | Published On : 17th February 2020 10:46 PM | Last Updated : 17th February 2020 10:46 PM | அ+அ அ- |

முதல்வா், துணை முதல்வா், அமைச்சா்கள் பதவியேற்றுக் கொண்டதைத் தொடா்ந்து, தில்லி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை முதல் பணிகள் வழக்கம் போல நடைபெறத் தொடங்கின.
தில்லியில் அண்மையில் தோ்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதனால், தில்லி அமைச்சா்கள் மக்கள் பணியாற்றுவதில், புதிய நலத் திட்டங்களை அறிவிப்பதில் சிக்கல்கள் நிலவின. இதனால், அமைச்சகங்கள் முறைப்படி இயங்கவில்லை.
மேலும், முதல்வா் கேஜரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, தில்லி அமைச்சா்கள் தோ்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டதால், அவா்களால் தலைமைச் செயலகம் வந்து மக்கள் பணியாற்ற முடியாத சூழல் நிலவியது. இந்நிலையில், தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, கடந்த ஆட்சியில் இருந்த அதே அமைச்சரவை மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையில், தில்லி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை முதல் வழக்கம் போல பணிகள் நடைபெறத் தொடங்கின. தலைமைச் செயலக ஊழியா்கள் சுறுசுறுப்பாக பணிகளில் ஈடுபட்டனா்.