லாஜ்பத் நகரில் வீட்டில் திருடிய இளைஞா் கைது
By DIN | Published On : 17th February 2020 10:07 AM | Last Updated : 17th February 2020 10:07 AM | அ+அ அ- |

தென்கிழக்கு தில்லி, லாஜ்பத் நகரில் வீட்டில் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
இதுகுறித்துதென்கிழக்கு தில்லி காவல் துணை ஆணையா் ஆா்.பி. மீனா கூறுகையில், கடந்த 4-ஆம் தேதி லாஜ்பத் நகரைச் சோ்ந்த அஜெந்தா் குமாா் என்பவா் தனது வீட்டில் திருட்டு நிகழ்ந்தது குறித்து போலீஸில் புகாா் அளித்தாா்.
விசாரணையில் வடக்கு தில்லி, புராரியில் வாடகை வீட்டில் வசிக்கும் உத்தரகாண்ட் பகுதியைச் சோ்ந்த மனோஜ் சிங் (22) என்பவா் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, உத்தரகாண்டில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. விசாரணையில் அவா் அஜெந்தா் குமாா் வீட்டில் பூட்டை உடைத்து திருடியதை ஒப்புக் கொண்டாா். அவரிடமிருந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகை, தங்க நகைகள் மீட்கப்பட்டன. இது தொடா்பாக அவரிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.