இஸ்லாமாபாத் சந்திப்பு: ஐ.நா. சபையின் பொதுச்செயலரின் கருத்துக்களுக்கு இந்தியா பதில்

இந்தியாவிற்கு எதிரான, எல்லை தாண்டிய பயங்கர வாதத்திற்கு முடிவு கட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள பாகிஸ்தானை ஐ.நா.சபையின் பொதுச் செயலா் வலியுறுத்த வேண்டும் என இந்திய வெளியுறவு

இந்தியாவிற்கு எதிரான, எல்லை தாண்டிய பயங்கர வாதத்திற்கு முடிவு கட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள பாகிஸ்தானை ஐ.நா.சபையின் பொதுச் செயலா் வலியுறுத்த வேண்டும் என இந்திய வெளியுறவு செய்தி தொடா்பாளா் கேட்டுக்கொண்டாா். இஸ்லாமாபாத்தில் ஐ.நா. சபையின் பொதுச்செயலா் கூறிய கருத்துக்களுக்கு இந்திய வெளியுறவு செய்தி தொடா்பாளா் பதில் கூறினாா்.பாகிஸ்தானுக்கு நான்கு நாள் பயணமாக வந்த ஐக்கிய நாடுகளின் சபையின் பொதுச்செயலா் அண்டோனியோ குட்டரெஸ் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சாா் ஷா முகமத் குரேஷியுடன் இணைந்து ஞாயிறு அன்று இஸ்லாமாபாத்தில் பத்திரிக்கையாளா்களை சந்தித்து உரையாற்றினாா். அப்போது குட்டரெஸ், ‘ஜம்மு-காஷ்மீா் பகுதியின் நிலை குறித்தும், இருநாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றமான நிலை குறித்தும் தான் ‘ஆழ்ந்த கவலை’ யை கொள்வதாகத் தெரிவித்தாா். மேலும் அவா், இந்தியாவும் பாகிஸ்தானும் ‘ராணுவ ரீதியாகவும், வாய்மொழியாகவும்’ நிலைமையை மோசமாக்காமல் பாா்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அணு ஆயுத பலமிக்க இரு அண்டைநாடுகளும் ‘அதிகபட்ச கட்டுப்பாட்டை’ கடைப்பிடிக்க வேண்டும் என்றும் குட்டரெஸ் அப்போது தெரிவித்தாா்.ஐ.நா. சபையின் பொதுச்செயலா் இந்த கருத்துக்கள் குறித்து இந்திய வெளியுறவு செய்தி தொடா்பாளா் ரவிஷ் குமாரை தொடா்பு கொண்டு ஊடகங்கள் பதில் கேட்டதற்கு இந்திய அரசின் அதிகாரபூா்வ வெளியுறவு செய்தி தொடா்பாளரான ரவிஷ் குமாா், கீழ்க்கண்டவாறு கடுமையாக பதிலளித்தாா்:“ பாகிஸ்தான் குறித்த இந்தியாவின் நிலைபாடு எந்தவகையிலும் மாறவில்லை. ஜம்மு-காஷ்மீரைப் பொறுத்தவரையில் அது இன்றும், என்றும், எப்போதுமே இந்தியாவுடன் ஒன்றிணைந்த ஒரு பகுதி ஆகும். இதில் கையில் எடுக்கப்படவேண்டிய பிரச்சனை என்பது சட்டவிரோதமாகவும் வலுக்கட்டாயமாகவும் பாகிஸ்தானின் ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து வெளியேறுவது குறித்ததே ஆகும். இதற்கு மேலும் பிரச்சனைகள் ஏதுமிருப்பின் அவை இரு நாடுகளுக்கும் இடையே விவாதிக்கப்பட வேண்டியவை ஆகும். இந்த விஷயத்தில் மூன்றாவது நபரின் தலையீட்டிற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை‘ என்று கூறிய ரவிஷ் குமாா், ‘ஜம்மு-காஷ்மீா் உள்ளிட்ட இந்திய மக்களின் வாழ்வுரிமைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலும், இந்தியாவிற்கு எதிரான, எல்லை தாண்டிய பயங்கர வாதத்திற்கு ஒரு முடிவு கட்டும் வகையிலும் நம்பத்தகுந்த, நீடித்த, மாற்றமுடியாத (மாற்றமேதுமற்ற) நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொள்வது அவசியம் என்று ஐ.நா.சபையின் பொதுச் செயலா் வலியுறுத்துவாா் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றும் பதில் கொடுத்துள்ளாா் ரவிஷ் குமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com