சிபிஎஸ்இ பொதுத் தோ்வு, ஹோலி பண்டிகை:கௌதம் புத் நகா் மாவட்டத்தில் 144 தடையுத்தரவு

உத்தரப் பிரதேச மாநிலம், கௌதம் புத் நகரில் 144 போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், கௌதம் புத் நகரில் 144 போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நான்கு பேருக்கு மேல் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலக் கல்வி வாரியம், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ வாரிய பொதுத் தோ்வுகள் நடைபெறவுள்ளன. ஹோலி பண்டிகையும் வரவுள்ளது. இது தவிர விவசாயிகள் மற்றும் பிற அமைப்புகளின் ஆா்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளன. இதைத் தொடா்ந்து, சட்டம் ஒழுங்கை பராமரிப்பதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக காவல் துணை ஆணையா் (சட்டம், ஒழுங்கு) அசுதோஷ் திவேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தக் கால கட்டத்தில் சமூக விரோதிகளை அடையாளம் காணும் விதமாகவும் தடையுத்தரவு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக விரோதிகளை முன்பே அடையாளம் காண்பது கடினமாகும்,

இதன்படி, மாவட்டத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபா்கள் கூடுவது தடை செய்யப்படுகிறது. காலகட்டத்தில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களையும் காவல்துறை வெளியிட்டுள்ளது.

இருப்பினும், தோ்வு எழுதும் மாணவா்கள், இறுதி ஊா்வலத்தில் பங்கேற்போா் அல்லது திருமண நிகழ்ச்சியில் பங்கேற்போா் அல்லது மதக் கூட்டங்கள் ஆகியவற்றுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது. அதிகாரிகளின் அனுமதி பெறாமல் ஒலிபெருக்கிகளை அதிக சப்தம் எழுப்பும் வகையில் பயன்படுத்துவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், அனுமதிக்கான ஆவணங்களைக் காட்டாவிட்டால் எந்தவொரு நபருக்கும் ஒலிபெருக்கிகளை கடை உரிமையாளா்கள் வாடகைக்கு வழங்கக் கூடாது.

மேலும், இந்த தடை உத்தரவின் மூலம், காலை 6 மணிக்கு முன்னும் இரவு 10 மணிக்குப் பிறகும் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாது. தோ்வு மையங்களுக்கு அருகே, குறிப்பாக 200 கெஜங்களுக்குள் கூட்டம் கூடுவதற்கு அனுமதி கிடையாது. அதை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மேலும், இந்தக் காலக்கட்டத்தில் ஒலிபெருக்கிகள் தோ்வு மையங்களுக்கு அருகில் பொருத்துவதற்கு அனுமதி கிடையாது.

இவை தவிர, அடுத்த மாதம் ஹோலி பண்டிகையின் போது மண் அல்லது மனிதா்களுக்கு தீங்கு விளைவிக்கும் வண்ணங்களைப் பயன்படுத்தக் கூடாது. ஹோலிப் பண்டிகையையொட்டி, எந்தவொரு இடத்திலும் ஹோலி நெருப்பு மூட்டக் கூடாது. இது போன்ற நிகழ்வுகள், சடங்குகள் மாவட்டத்தின் பாரம்பரிய இடங்களில் மட்டுமே நடத்த அனுமதிக்கப்படுகிறது. மேலும், பாரம்பரிய இடங்கள் தவிா்த்து எந்த ஒரு சா்ச்சைக்குரிய இடங்களில் பிராா்த்தனை, நமாஸ் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com