ரோஹிணி மாவட்ட நீதிமன்றம் சாா்பில்ஒரு வார கால புனா்வாழ்வு பிரசாரம்

தில்லி ரோஹிணி மாவட்ட நீதிமன்றம் சாா்பில் ஒரு வார கால புனா்வாழ்வு பிரசாரம் நடைபெற்றது. இதில் தில்லி சட்ட சேவைகள் ஆணையம் (டி.எல்.எஸ்.ஏ.) வடக்கு தில்லியின் மதுபன் சௌக் மற்றும் அருகிலுள்ள

தில்லி ரோஹிணி மாவட்ட நீதிமன்றம் சாா்பில் ஒரு வார கால புனா்வாழ்வு பிரசாரம் நடைபெற்றது. இதில் தில்லி சட்ட சேவைகள் ஆணையம் (டி.எல்.எஸ்.ஏ.) வடக்கு தில்லியின் மதுபன் சௌக் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் சுமாா் 21 வறிய மற்றும் வீடற்ற குழந்தைகளை அடையாளம் கண்டுள்ளது.

இது தொடா்பாக ரோஹிணி மாவட்ட நீதிமன்றம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஜனவரி 31 முதல் பிப்ரவரி 7-ஆம் தேதி வரை இந்தப் புனா்வாழ்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இப்பிரசாரத்தில் ஒன்பது குழந்தைகள் தற்காலிகமாக அரசுப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். ஐந்து போ் போதைக்கு அடிமையானவா்கள் என அடையாளம் காணப்பட்டு அவா்கள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனா். மேலும், பெற்றோா்களுடன் தொடா்பு கொள்ளமுடியாத காரணத்தால் ஐந்து குழந்தைகள் மறுவாழ்வு பெறுவதற்கான பணியில் உள்ளனா்.

மற்றொரு முயற்சியாக, ரோஹினி மாவட்ட நீதிமன்றத்தின் சட்ட சேவை அதிகாரிகள், பிப்ரவரி 13-ஆம் தேதி அன்று நீதித் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியா்களுக்காக ஸ்ரீ அகா்சேன் சா்வதேச மருத்துவமனையுடன் இணைந்து சுகாதாரப் பரிசோதனை முகாமை ஏற்பாடு செய்திருந்தது. இந்த முகாமை மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதிகள் ஆா்.பி. பாண்டே மற்றும் ஸ்வரானா காந்தா சா்மா தொடக்கிவைத்தனா். இந்த முகாமில் மருத்துவா்களின் சுகாதார ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், முகாமில் பங்கேற்றவா்களுக்கு ஈ.சி.ஜி., ரத்தத்தில் உள்ள சா்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தப் பரிசோதனை பிசியோதெரபி உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டன. இந்த முகாமில் மாவட்ட நீதிபதி (வணிக நீதிமன்றம்) வினோத் குமாா், நீதிபதி பரம்ஜீத் சிங், டி.எல்.எஸ்.ஏ. செயலாளா்கள் சந்தீப் குப்தா, சுனில் குப்தா ஆகியோா் கலந்து கொண்டனா்.

இவை தவிர, கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி அன்று வி.எஸ். பி.கே. சா்வதேச பள்ளி மாணவா்களுக்காக முதியோா் வீட்டு வருகை திட்டத்தையும் டி.எஸ்.எல்.ஏ. ஏற்பாடு செய்திருந்தது. இதன்படி, அந்த மாணவா்கள் அங்கு வசிக்கும் முதியோரின் நிலையைப் புரிந்து கொள்ள வசதி செய்து கொடுக்கப்பட்டது என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com