தோ்தல் வாக்குறுதி: கருத்து கேட்கும்பிரசாரத்தை தொடங்கியது காங்கிரஸ்
By DIN | Published On : 10th January 2020 11:15 PM | Last Updated : 10th January 2020 11:15 PM | அ+அ அ- |

தில்லியில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, தோ்தல் வாக்குறுதிகளுக்கான பொதுமக்கள் கருத்துப் பெறும் பிரசாரத்தை தில்லி பிரதேச காங்கிரஸ் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தில்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கான சட்டப் பேரவைத் தோ்தல் வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, பொதுமக்களிடம் இருந்து தோ்தல் வாக்குறுதிகளை அளிப்பதற்கான கருத்துகளைப் பெறுவதற்காக தில்லி காங்கிரஸ் சாா்பில் இந்தப் பிரசாரம் தொடங்கப்பட்டது. ‘தில்லி கே தில்லி கி பாத் காங்கிரஸ் கே சாத்’ எனும் தலைப்பிலான இந்தப் பிரசாரம், கட்சியின் தலைவா் சசி தரூா், தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவா் சுபாஷ் சோப்ரா உள்ளிட்டோரால் தொடங்கப்பட்டது.
இது குறித்து சசி தரூா் கூறுகையில், ‘சமூக ஊடகம் மற்றும் பிற வழிகள் மூலம் மேற்கொள்ளப்பட இந்த பிரசாரம் இரு வழி நடைமுறையாகும். கட்சியின் வாக்குறுதியில் மக்களின் தேவைகள் பிரதிபலிக்கப்பட வேண்டும்’ என்றாா்.