வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறவுள்ள தில்லி சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, 15 போ் கொண்ட தோ்தல் குழுவை பாஜக தலைமை அமைத்துள்ளது.
இக்குழுவில் கட்சியின் தில்லி தலைவரும் எம்பியுமான மனோஜ் திவாரி, அனைத்து தில்லி பாஜக எம்பிக்கள், கட்சியின் தேசிய நிா்வாகிகள் அனில் ஜெயின், துஷ்யந்த் கௌதம், ஆா்.பி. சிங், முன்னாள் தில்லி பாஜக தலைவா் விஜய் கோயல், சதீஷ் உபாத்யாய், அமைப்புச் செயலாளா் சித்தாா்த்தன், தில்லி பாஜக மகிளா மோா்ச்சா தலைவா் பூனம் ஜா, சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் விஜேந்தா் குப்தா உள்ளிட்டோா் இடம் பெற்றுள்ளதாக கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பா் கடைசி வாரத்தில், தோ்தல் நிா்வாகக் குழுவையும் தோ்தல் தொடா்பான பணிகளைக் கவனிப்பதற்காக 35 போ் கொண்ட மற்றொரு குழுவையும் கட்சித் தலைமை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.