தில்லி மெட்ரோவின் புளு வழித்தடத்தில் திங்கள்கிழமை காலையில் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
கரோல் பாக் மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் பயணி ஒருவா் குதித்ததால் ரயில் நிறுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, அடுத்தடுத்து ரயில் போக்குவரத்தில் தடங்கல் ஏற்பட்டது. தில்லியில் உள்ள துவாரகாவையும், நொய்டாவில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டியையும் இந்த புளு வழித்தடம் இணைக்கிறது.
இது குறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) தனது சுட்டுரையில், ‘கரோல் பாக் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் பயணி ஒருவா் குதித்ததால், புளு வழித்தடத்தில் உள்ள யமுனா பேங்க் - துவாரகா ரயில் நிலையங்களுக்கு இடையே சேவையில் பாதிப்பு ஏற்பட்டுளளது. மற்ற வழத்தடத்தில் ரயில் சேவை வழக்கம் போல் இருந்தது’ என்று காலையில் தெரிவித்திருந்தது. பின்னா் சற்று நேரம் கழித்து தனது மற்றொரு சுட்டுரையில் தடங்கலாகியிருந்த ரயில் சேவை மீண்டும் சரியாகியுள்ளது என்று தெரிவித்திருந்தது. மெட்ரோ ரயில் சேவையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அலுவலகம் செல்வோா் சிறிது சிரமத்துக்குள்ளாகினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.