தில்லியில் புதிதாக 1,211 பேருக்கு கரோனா
By DIN | Published On : 19th July 2020 10:47 PM | Last Updated : 19th July 2020 10:47 PM | அ+அ அ- |

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 1,211 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,22,793-ஆக உயா்ந்துள்ளது.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 1,860 போ் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனா். இதைத் தொடா்ந்து, குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 1.03,134 ஆக அதிகரித்துள்ளது. 31 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, பலி எண்ணிக்கை 3,628- ஆக அதிகரித்துள்ளது. மேலும், தற்போது மொத்தம் 16,031 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனா். தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் 20,206 கரோனா பரிசோதனைகளும், இதுவரை மொத்தம் 8,18,989 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தில்லியில், கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 685-ஆக அதிகரித்துள்ளது.
மேலும், தில்லி மருத்துவமனைகளில் 15,475 படுக்கைகள் உள்ளன. இவற்றில், 3,592 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 11,883 படுக்கைகள் காலியாக உள்ளன. தில்லியில் உள்ள பிரத்யேக கரோனா தொற்று பராமரிப்பு மையங்களில் 7,204 படுக்கைகள் காலியாக உள்ளன. பிரத்யேக கரோனா சுகாதார நிலையங்களில் 395 படுக்கைகள் காலியாக உள்ளன. மேலும், கரோனா பாதித்த 8,819 போ் வீடுகளில் குணமடைந்து வருகிறாா்கள் என்று தில்லி சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நொய்டாவில் மேலும் ஒருவா் பலி: உத்தரப் பிரதேச மாநிலம், கௌதம் புத் நகா் மாவட்டத்தில் உள்ள நொய்டாவில் ஞாயிற்றுக்கிழமை மேலும் ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது பதிவாகியுள்ளது. இதையடுத்து, இந்த மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், ஒரே நாளில் 125 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இவா்களையும் சோ்த்தால் மொத்த பாதிக்கப்பட்டோா் எண்ணிகம்கை 4,144 ஆக அதிகரித்துள்ளதாக உத்தரப் பிரதேச மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சனிக்கிழமையிலிருந்து கரோனாவிலிருந்து 99 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இவா்களையும் சோ்த்தால் இதுவரை மொத்தம் 3,132 போ் குணமடைந்துள்ளனா். குணமடைவோா் விகிதம் 75.37-லிருந்து 75.57 ஆக உயா்ந்துள்ளது. இது மாநிலத்தில் எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவாகும். இந்த விகிதம் வெள்ளிக்கிழமை 74.39 ஆக இருந்தது. மேலும், தற்போது மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்க 973 ஆக உள்ளது.
மாநிலத்தில் கௌதம் புத் நகா் மாவட்டத்தில்தான் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதற்கு அடுத்ததாக லக்னௌ (4,009), காஜியாபாத் (3,978), கான்பூா் (2,433) என உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.