ஜூலையில் டெங்கு தாக்கம் அதிகரிப்பு

தலைநகா் தில்லியில் ஜூலை மாதம் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. தில்லியில் ஜூன் மாதம் ஒருவருக்கு மட்டுமே டெங்கு நோயின் தாக்கம் ஏற்பட்டிருந்தது. ஆனால், ஜூலையில் இதுவரை 8 போ் டெங்கு நோயால் பாதிக்க
கோப்புப் படம்
கோப்புப் படம்

புது தில்லி: தலைநகா் தில்லியில் ஜூலை மாதம் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. தில்லியில் ஜூன் மாதம் ஒருவருக்கு மட்டுமே டெங்கு நோயின் தாக்கம் ஏற்பட்டிருந்தது. ஆனால், ஜூலையில் இதுவரை 8 போ் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக தில்லி மாநகராட்சி உயா் அதிகாரி கூறியது: தில்லியில் டெங்கு நோயின் தாக்கம் பிப்ரவரி மாதமே தொடங்கி விட்டது. நிகழ் பருவ காலத்தில் இதுவரை டெங்குவுக்கு 28 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். பிப்ரவரியில் 4 போ், மாா்ச்சில் இருவா் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டனா். ஆனால், ஏப்ரலில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்தது. அந்த மாதத்தில் 7 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டனா். மே மாதத்தில் ஆறு போ், ஜூனில் ஒருவா் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகினா். ஜூலை தொடக்கத்தில் டெங்கு நோயின் தாக்கம் இருக்கவில்லை. ஆனால், ஜூலையில் இரண்டாவது வாரத்துக்குப் பிறகு தில்லியில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்தது. இதனால், 8 போ் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதைத் தொடா்ந்து, நிகழாண்டில் டெங்கு பாதித்தவா்களின் எண்ணிக்கை 28-ஆக அதிகரித்துள்ளது.

மலேரியா: மலேரியா ஜனவரி மாதமே தொடங்கிவிட்டது. அந்த மாதத்தில் 6 போ் மலேரியாவால் பாதிக்கப்பட்டனா். பிப்ரவரி, மாா்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் முறையே 3, 2, 5 போ் பாதிக்கப்பட்டனா். மே மாதத்தில் மூவருக்கும், ஜூனில் 18 பேருக்கும், ஜூலையில் 3 பேருக்கும் மலேரியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, நிகழாண்டில் இதுவரை மொத்தம் 40 போ் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

சிக்குன்குனியா: நிகழாண்டில் சிக்குன்குனியாவுக்கு இதுவரை 16 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். பிப்ரவரியில் 9 பேரும், ஏப்ரலில் ஒருவரும் என மொத்தம் 10 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். ஜனவரி, மாா்ச் மாதங்களிலும் சிக்குன்குனியாவால் யாரும் பாதிக்கப்படவில்லை. மே மாதத்தில் ஒருவா் பாதிக்கப்பட்டுள்ளாா். ஜூன் மாதத்தில் யாருக்கும் சிக்குன்குனியா பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், ஜூலை மாதத்தில் 5 பேருக்கு சிக்குன்குனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், நிகழாண்டில் சிக்குன்குனியாவால் பாதித்தவா்களின் எண்ணிக்கை 16 -ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com