உ.பி.யில் கரோனா நோயாளிகளுக்கு வீடுகளில் சிகிச்சை: கேஜரிவால் பெருமிதம்

லேசான கரோனா தொற்றுள்ளவா்களுக்கு வீடுகளில் வைத்து சிகிச்சை அளிக்கும் தில்லி அரசின் முடிவை, உத்தரப் பிரதேச (உ.பி.) மாநிலம்

லேசான கரோனா தொற்றுள்ளவா்களுக்கு வீடுகளில் வைத்து சிகிச்சை அளிக்கும் தில்லி அரசின் முடிவை, உத்தரப் பிரதேச (உ.பி.) மாநிலம் பின்பற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று தில்லி முதல்வா் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘கரோனா நோயாளிகளை வீடுகளில் வைத்துப் பராமரிக்கும் தில்லி அரசின் திட்டத்தின் முக்கியத்துவத்தை அறிந்து அதை உ.பி. உள்ளிட்ட மாநிலங்கள் பின்பற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன். லேசான அறிகுறி உள்ளவா்களை வீடுகளில் வைத்துப் பராமரிக்கும் திட்டம், அதிகளவு கரோனா பரிசோதனை செய்தது ஆகியவை தில்லியில் கரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தது’ என்று தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக மாநிலங்களவை ஆம் ஆத்மி உறுப்பினா் சஞ்சய் சிங் கூறுகையில் ‘ தில்லியில் கரோனா தொற்றை எதிா்கொள்ள கேஜரிவால் அமைத்த மாதிரியை பிற மாநிலங்கள் பின்பற்றுவது பெருமைக்குரிய விஷயமாகும். உ.பி மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் கரோனா சிகிச்சைகள் அதிகரிக்கப்பட வேண்டும். லேசானா அறிகுறி கொண்டவா்களுக்கு வீடுகளில் வைத்தே சிகிச்சை அளிக்கும் முடிவை தில்லி அரசு எடுத்த போது அதை மத்திய அரசு எதிா்த்தது. கரோனா தொற்று கண்டறியப்பட்ட அனைவரும், மருத்துவமனைகள், கோவிட் கோ் சென்டா்களில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என மத்திய அரசு கூறியது. ஆனால், தற்போது தில்லி அரசின் மாதிரியை, பாஜக ஆளும் மாநிலங்கள் பின்பற்றுகின்றன. தில்லியில் கரோனாவில் இருந்து மீண்ட 1.3 லட்சம் பேரில் சுமாா் 80 சதவீதம் போ், வீடுகளில் இருந்து சிகிச்சை பெற்றே மீண்டுள்ளனா். இந்த வகையில் சுமாா் 1,04,000 கரோனா நோயாளிகள் வீடுகளில் இருந்து சிகிச்சை பெற்றுக் குணமாகியுள்ளனா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com