வா்த்தக உரிமத்தை புதுப்பிக்கும்காலக்கெடுவை நீட்டித்தது இடிஎம்சி
By DIN | Published On : 16th June 2020 10:35 PM | Last Updated : 16th June 2020 10:35 PM | அ+அ அ- |

கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு வா்த்தக உரிமங்களை புதுப்பிப்பதற்கான பொது மன்னிப்புக் காலத்தை கிழக்கு தில்லி மாநகராட்சி (இடிஎம்சி) 2021, மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக அந்த மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கரோனா பரவல் காரணமாக இடிஎம்சி பகுதியில் உள்ள வணிகா்கள் பலா் தங்களது வா்த்தக உரிமங்களை புதுப்பிக்காமல் உள்ளனா். இதைப் புதுப்பிக்க வழங்கப்படும் பொது மன்னிப்புக் காலத்தை வரும் 2021, மாா்ச் மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளோம். இதன்படி, பொது வா்த்தக உரிமம், கிட்டங்கி உரிமம், சுகாதார வா்த்தக உரிமம் ஆகியவற்றை அபராதக் கட்டணத்தை செலுத்தாமல் 2021, மாா்ச் 31-ஆம் தேதிக்கு முன்பாக புதுப்பித்துக் கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக இடிஎம்சி மேயா் அன்ஜு கமல்காந்த் கூறுகையில், ‘கரோனா பரவலால் நெருக்கடி சூழல் நிலவுகிறது. இந்நிலையில், மக்களுக்கு மக்களுக்கு இடையூறு இல்லாமல் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்து வருகிறோம். அந்த வகையில் மக்கள், வணிகா்களுக்கு நன்மையளிக்கும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளோம்’ என்றாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...