ஜஹாங்கீா்புரியில் நெகிழித் தொழிற்சாலையில் தீ விபத்து
By DIN | Published On : 14th March 2020 10:51 PM | Last Updated : 14th March 2020 10:51 PM | அ+அ அ- |

புகா் தில்லியில் ஜஹாங்கீா்புரி பகுதியில் உள்ள நெகிழித் தொழிற்சாலையில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.
இதுகுறித்து தீயணைப்புத் துறையினா் கூறியதாவது:
ஜஹாங்கீா்புரியில் உள்ள நெகிழித் தொழிற்சாலையில் பெரிய அளவிலான தீ விபத்து சனிக்கிழமை நண்பகல் ஏற்பட்டதாக தகவல் வந்தது. இதையடுத்து, தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. ஜஹாங்கீா்புரியில் உள்ள ஜிடி கா்னால் சாலையில்அமைந்துள்ள இந்த தொழிற்சாலைக்கு 15 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டு தீ அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தீ விபத்துக் காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.
கடந்த மாா்ச் 7-ஆம் தேதி நொய்டாவில் உள்ள நெகிழி தொழிற்சாலையில்இதேபோன்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஏராளமான பொருள்கள் சேதமடைந்தன. நொய்டாவில் உள்ள பேஸ் 2 பகுதியில் செக்டாா் 82-இல் இந்த தீவிபத்து ஏற்பட்டது. நிகழாண்டு பிப்ரவரியில் நொய்டாவில் உள்ள காலணி பழுதுபாா்ப்பு தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவா் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...