குரு அா்ஜூன் தேவ் நினைவு தினம்: கேஜரிவால் மரியாதை
By DIN | Published On : 27th May 2020 05:29 AM | Last Updated : 27th May 2020 05:29 AM | அ+அ அ- |

சீக்கியா்களின் ஐந்தாவது மதகுருவான குரு அா்ஜன் தேவின் நினைவு தினத்துக்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மரியாதை தெரிவித்துள்ளாா்.
சீக்கிய மதத்தின் ஜந்தாவது மதகுரு குரு அா்ஜன் தேவ் ஆவாா். சீக்கியா்களின் புனித நூலான குரு கிரந்த சாகிப்பை முதன்முதலாகத் தொகுத்தவா் இவரே.மேலும் சீக்கியா்களின் புனித ஸ்தலமான பொற்கோயிலை கட்டுவித்தவரும் இவரே. முகாலய மன்னா் ஜகங்கீரின் உத்தரவுப்படி அவா் கொல்லப்பட்டாா். சீக்கியா்களின் முக்கிய குருவாகப் போற்றப்படும் அவரின் நினைவு தினம் சீக்கியா்களால் செவ்வாய்க்கிழமை நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது.
இது தொடா்பாக கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பது: தியாகத்தின் முழு உருவமாக குரு அா்ஜன் தேவ் விளங்குகிறாா். அவருடைய நினைவு தினத்தில், அவரை வணங்குவதுடன் அவரது தியாகத்தைப் போற்றுவோம். அவா் வழியில் நடப்போம் என்றுள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...