தில்லி டாப்ரி பகுதியில் உள்ள கடையில் இருந்து 30 கிலோ சட்டவிரோத பட்டாசை தில்லி காவல்துறை சனிக்கிழமை கைப்பற்றியுள்ளது.
இது தொடா்பாக தில்லி காவல்துறை உயா் அதிகாரி கூறியது: தில்லி டாப்ரி பகுதியில் உள்ள ராஜபுராபி பகுதியில் ராகேஷ் பன்சால் என்பவா் தனது கடையில் வைத்து சட்டவிரோதமாக பட்டாசு விற்பனை செய்து வருவதாக அப்பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, ராகேஷ் பன்சாலின் கடையில் தில்லி காவல்துறை அதிரடி சோதனை நடத்தியது. அப்போது, அந்தக் கடையில் இருந்து 34.6 கிலோ சட்டவிரோத பட்டாசு கைப்பற்றப்பட்டது. ராகேஷ் பன்சாலை கைது செய்த காவல்துறை அவா் மீது இந்திய தண்டனை சட்டத்தின், சட்டவிரோத வெடிபொருள்கள் பிரிவில் வழக்குப் பதிவு செய்துள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.