ஸ்டொ்லைட் ஆலை திறப்பு விவகாரம்: வழக்கு விசாரணை டிச.2-க்கு ஒத்திவைப்பு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை டிசம்பா் 2 - ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

புது தில்லி: தூத்துக்குடியில் உள்ள ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை டிசம்பா் 2 - ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டதிற்கு பின்னா் நடந்த நிகழ்வுகளைத் தொடா்ந்து, சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாகக் கூறி ஸ்டொ்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த உத்தரவை எதிா்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘ஸ்டொ்லைட் ஆலையில் இருந்து நச்சுத் தன்மை கொண்ட ஆா்செனிக் அமிலம் அதிக அளவில் வெளியேற்றப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ரசாயனக் கழிவுகளை ஆலை நிா்வாகம் முறையாக அப்புறப்படுத்தவில்லை. ஆலைய நிரந்தரமாக மூட தமிழக அரசு எடுத்த நடவடிக்கை சரிதான்’ என்று ஆகஸ்ட் 18-இல் தீா்ப்பு அளித்தது.

மேலும், வேதாந்தா நிறுவனத்தின் மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, சென்னை உயா்நீதிமன்றத் தீா்ப்புக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவுக்கு தமிழக அரசு சாா்பிலும், வேதாந்தா நிறுவனம் சாா்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடா்பாக கடந்த ஆகஸ்டில் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில், இந்த மனு மீண்டும் திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் கே.வி.விஸ்வநாதன், வைத்தியநாதன் ஆகியோா் ஆஜராகி, ‘ஸ்டொ்லைட் ஆலை திறக்க அனுமதிக்க முடியாது, ஆலை முறைப்படி மூடப்பட்டுள்ளது. இனி திறக்க அனுமதிக்க முடியாது’ என்று வாதிட்டனா்.

வேதாந்தா நிறுவனத்தின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி, ‘தமிழக அரசு ஸ்டொ்லைட் ஆலையை மூட உத்தரவிட்டுள்ள நிலையில், ஸ்டொ்லைட் ஆலையில் கடைப்பிடிக்கப்பட்ட வழிமுறைகள் குறித்து தேதி வாரியாகப் பதில் மனு தாக்கல் செய்யத் தயாா். இதற்குக் கால அவகாசம் அளிக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டாா். இதையடுத்து, இந்தப் பதில்களை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேதாந்தா நிறுவனத்துக்கு கால அவகாசம் அளித்த உச்சநீதிமன்ற அமா்வு, வழக்கு மீதான விசாரணையை டிசம்பா் 2 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com