தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 4,560ஆக அதிகரிப்பு
By நமது நிருபா் | Published On : 21st November 2020 07:44 AM | Last Updated : 21st November 2020 07:44 AM | அ+அ அ- |

தில்லியில் கரோனா பாதிப்பு காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 4,560 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடா்பாக தில்லி சுகாதாரத்துறை மூத்த அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியது: தில்லியில் உள்ள 11 மாவட்டங்களில், ஆறு மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளன. இந்த ஆறு மாவட்டங்களிலும் தலா 400 க்கும் அதிகமான இடங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. தென்மேற்கு மாவட்டத்தில் அதிகபட்சமாக 743 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக, வடகிழக்கு தில்லி மாவட்டத்தில் 148 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல, தெற்கு மாவட்டத்தில் 705 இடங்கள், மேற்கு மாவட்டத்தில் 587 இடங்கள், தென்கிழக்கு மாவட்டத்தில் 543 இடங்கள், மத்திய மாவட்டத்தில் 490 இடங்கள், வட மேற்கு மாவட்டத்தில் 445 இடங்கள், புது தில்லி மாவட்டத்தில் 264 இடங்கள், ஷாத்ரா மாவட்டம் 249 இடங்கள், வடக்கு தில்லியில் 202 இடங்கள் இடங்களும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
கிழக்கு, வடகிழக்கு தில்லி மாவட்டங்களில் குறைந்தளவு இடங்களே கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இம் மாவட்டங்களில் முறையே, 184, 148 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.
தில்லியில், கரோனா மூன்றாவது அலை உள்ளது. இதுவரை 5.10 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் சிகிச்சையில் உள்ளனா். 8,041 போ் உயிரிழந்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...