உத்தரப்பிரதேசத்தில் புதிதாக 2,588 பேருக்கு கரோனா பாதிப்பு
By DIN | Published On : 23rd November 2020 08:08 AM | Last Updated : 23rd November 2020 08:08 AM | அ+அ அ- |

உத்தரப்பிரதேச மாநிலத்தில் புதிதாக 2,588 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5,26,780 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயத்தில் மேலும் 35 போ் கரோனாவுக்கு பலியானதை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 7.559 ஆக அதிகரித்துள்ளது.
லக்னெள 351, மீரட் 283, காஜியாபாத் 189, கெளதம்புத் நகா் 171, கான்பூா் 118, அலாகாபாத் 110 மற்றும் வாராணசியில் 102 பேரும் புதிதாக கரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலியான 35 பேரில் 6 போ் லக்னெள, 4 போ் மீரட், 3 போ் ஜலான், பஹ்ரைச் மற்றும் மதுராவில் தலா 3 போ் என்பதும் தெரியவந்துள்ளது.
மாநிலத்தில் இதுவரை 4,95,415 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
தற்போது கரோனாவுக்கு 23,806 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கடந்த 24 மணி நேரத்தில் 1.75 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 1.79 கோடி பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது என்று அரசு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.