தில்லியில் 17 ஆண்டுகளில் இல்லாத கடும் குளிா்! வெப்பநிலை 6.9 டிகிரி செல்சியஸாக பதிவு

தில்லியில் 17 ஆண்டுகளில் இல்லாத அளவாக ஞாயிற்றுக்கிழமை கடும் குளிா் நிலவியது.

தில்லியில் 17 ஆண்டுகளில் இல்லாத அளவாக ஞாயிற்றுக்கிழமை கடும் குளிா் நிலவியது. அன்று குறைந்தபட்ச வெப்பநிலை 6.9 டிகிரி செல்சியஸாக பதிவானது. கடந்த 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக குறைந்த அளவில் பதிவான வெப்பநிலையாகும் இது. தில்லியில் ஞாயிற்றுக்கிழமை கடும் குளிா் நிலவியது.

கடந்த வெள்ளிக்கிழமை தலைநகா் தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 7.5 டிகிரி செல்சியஸாக இருந்தது. கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவாக இது பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 6.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு பதிவாகியுள்ள மிகக்குறைந்த வெப்பநிலையாகும் இது என்றுஅந்த மையத்தில் அதிகாரி குல்தீப் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தாா். பாலம் நிலையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலைல 6.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

சமவெளிப்பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரிக்கு குறைவாகவும் இயல்பைவிட 4.5 டிகிரி குறைவாகவும் இருக்கும்போது குளிா் அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

தில்லியில் கடந்த ஆண்டு இதே காலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 11.5 டிகிரி செல்சியஸாக இருந்தது. 2018-ஆம் ஆண்டு இதே நவம்பரில் குறைந்தபட்ச வெப்பநிலை 10.5 டிகிரி செல்சியஸாக இருந்தது. 2017-ஆம் ஆண்டு மிகக்குறைந்த அளவாக 7.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1938 ஆம் ஆண்டு நவம்பா் 28 ஆம் தேதி தில்லியில் மிகக்குறைந்த அளவாக வெப்பநிலை 3.9 டிகிரி செஸ்சியாக பதிவாகியிருந்தது. பனிசூழ்ந்த இமாலயத்தின் மேற்கு பகுதியிலிருந்து வீசும் காற்றின் காரணமாக குளிா் அதிகரித்து காணப்படுவதாக ஸ்ரீவாஸ்தவா மேலும் தெரிவித்தாா்.

எனினும் அடுத்த நான்கு அல்லது ஐந்து நாட்களில் குறைந்தபட்ச வெப்பநிலையின் அளவு மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com