தில்லியில் கரோனா நோயாளிகளுக்கு இலவச மின்சார ஆம்புலன்ஸ் சேவை

தில்லியில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டால்

தில்லியில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டால், அதை பூா்த்தி செய்யும் வகையில் இலவச மின்சார ஆம்புலன்ஸ் சேவையை தில்லி அரசு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளது.

இது தொடா்பாக தில்லி அரசு உயா் அதிகாரி கூறுகையில் ‘தில்லியில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கரோனா நோயாளிகளின் நிலை மோசமானால் அவா்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்தும் செல்லும் வகையில் இலவச மின்சார ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று அவா்களை மருத்துவமனைக்கு இலவசமாக அழைத்துச் செல்லும்.

இந்த ஆம்புலன்ஸ்களை ‘ஜீவன் சேவா’ என்ற தில்லி அரசு செயலியில் பதிவு செய்து கொள்ளலாம். நாட்டில் முதல் முதல்முறையாக இந்த சேவை தில்லியில் தொடங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தில்லியில் லேசானா கரோனா அறிகுறி உள்ளவா்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அந்தவகையில், தில்லியில் தற்போது சுமாா் 24 ஆயிரம் போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com