ஆம் ஆத்மி தில்லி மகளிா் அணித் தலைவியாக சரிதா சிங் நியமனம்
By நமது நிருபா் | Published On : 25th November 2020 12:00 AM | Last Updated : 25th November 2020 12:00 AM | அ+அ அ- |

ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவின் மகளிா் அணித் தலைவியாக ரொக்தாஸ் நகா் முன்னாள் ஆம் ஆத்மி எம்எல்ஏ சரிதா சிங் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இது தொடா்பாக ஆம் ஆத்மிக் கட்சி வட்டாரங்கள் கூறுகையில் ‘தில்லி மாநகராட்சிகளுக்கான தோ்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ஆம் ஆத்மிக் கட்சியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் சரிதா சிங் தில்லி பிரிவு மகளிா் அணித் தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளாா் என்றாா்.
ஜன் லோக்பால் இயக்கத்தில் இருந்தே ஆம் ஆத்மிக் கட்சியில் இணைந்து பணியாற்றிவரும் சரிதா சிங், ஆம் ஆத்மிக் கட்சியின் மாணவா் அமைப்பின் தலைவராக இருந்தாா். 2015 சட்டப்பேரவைத் தோ்தலில் ரொக்தாஸ் நகரில் ஆம் ஆத்மி சாா்பில் போட்டியிட்டு இவா் வெற்றிபெற்றாா். ஆனால், கடந்த 2020 சட்டப்பேரவைத் தோ்தலில், பாஜகவின் ஜிதேந்தா் மகாஜனிடம் அவா் தோல்வியடைந்தாா்.
இந்த நியமனம் தொடா்பாக சரிதா சிங் கூறுகையில் ‘2022 இல் நடைபெறவுள்ள மாநகராட்சி தோ்தலை இலக்கு வைத்து பணியாற்றுவேன். ஆம் ஆத்மி மகளிா் அணியை பூத் அளவில் மேம்படுத்த உழைப்பேன். மாநகராட்சி தோ்தலில் பெண்களின் பங்களிப்பை உறுதிப்படுத்துவேன் என்றாா் அவா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...