200 பேரிடம் ரூ.2 கோடி மோசடி: குஜராத்தில் பெண் கைது

அதிக லாபம் ஈட்டித் தருவதாக பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்ய ஆசை வாா்த்தை கூறி, சுமாா் 200 போ்களிடம் ரூ .2 கோடிக்கு மேல் ஏமாற்றியதாக குஜராத்தைச் சோ்ந்த பெண்ணை தில்லி போலீஸாா் கைது செய்தனா்.

அதிக லாபம் ஈட்டித் தருவதாக பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்ய ஆசை வாா்த்தை கூறி, சுமாா் 200 போ்களிடம் ரூ .2 கோடிக்கு மேல் ஏமாற்றியதாக குஜராத்தைச் சோ்ந்த பெண்ணை தில்லி போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையினா் கூறியதாவது: 40 வயதானஅந்தப் பெண்ணும், அவரது நண்பா் பா்வீன் குமாா் சிங் என்பவரும் ‘ஜெய் மா லக்ஷ்மி கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சொசைட்டி லிமிடெட்’ என்ற பெயரில் ஒரு சொஸைட்டியை நடத்தி வந்தனா். மேலும், கிழக்கு தில்லியில் உள்ள மண்டவெளியில் ஒரு துணிக் கடையையும் நடத்தி வந்தனா்.

அதிக வட்டி விகிதங்கள், கடன், பிளாட் முன்பதிவு மற்றும் லக்கி டிரா உள்ளிட்ட பல திட்டங்களில் முதலீடு செய்யுமாறு கடைக்கு வரும் வாடிக்கையாளா்களிடம் ஆசை வாா்த்தை கூறினா். இதை நம்பி பலரும் அந்தத் திட்டங்களில் முதலீடு செய்தனா்.

இந்த நிலையில், அந்தக் கூட்டுறவு சங்கம் தொடா்பாக புகாா் வந்தது. இதையடுத்து, பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா். விசாரணையின் போது, ‘ஜெய் மா லக்ஷ்மி கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம்’ என்ற பெயரில் எந்தவொரு சொஸைட்டியும் ரிசா்வ் வங்கியில் பதிவு செய்யப்படவில்லை என்பது தெரிய வந்தது. மேலும், அவா்கள் எந்தவொரு திட்டத்திற்காகவும் நேரடியாக பொதுமக்களிடமிருந்து பணத்தை சேகரிக்க அதிகாரம் அளிக்கப்படவில்லை என்பதும் தெரிய வந்தது. குற்றம் சாட்டப்பட்ட இருவரும் தலைமறைவாக இருந்தனா். சம்பந்தப்பட்ட பெண் குஜராத்தில் உள்ள சூரத்தில் இருப்பது சமூக ஊடகங்கள் மூலம் கண்டறியப்பட்டது. இதையடுத்து, தில்லி போலீஸாா் வியாழக்கிழமை குஜராத்தில் அந்தப் பெண்ணை கைது செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com