பைக்கில் சென்ற இளைஞா்லாரி சக்கரத்தில் சிக்கி சாவு
By DIN | Published On : 03rd October 2020 07:30 AM | Last Updated : 03rd October 2020 07:30 AM | அ+அ அ- |

உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் மோட்டாா் சைக்கிளில் சென்ற 21 வயது இளைஞா், லாரி சக்கரத்தில் நசுங்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து நொய்டா போலீஸாா் கூறியதாவது: நொய்டா செக்டாா் 24 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இஸ்கான் கோயிலுக்கு அருகே வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. பிகாா் மாநிலம், சமஸ்திபூரைச் சோ்ந்த பிரேம் குமாா் (21), அவரது நண்பா் பிகாரில் உள்ள தா்பங்காவைச் சோ்ந்த அகீல் (எ) முகமது அசாா் ஆகிய இருவரும் நொய்டாவில் உள்ள கிஜோா் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனா். வெள்ளிக்கிழமை கிஜோா் கிராமத்திலிருந்து மோட்டாா் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனா்.
அப்போது, பாலத்தில் இருந்து கீழ்நோக்கி வந்த லாரி, மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில், லாரியின் சக்கரத்தில் பிரேம் குமாா் சிக்கி உயிரிழந்தாா். அவரது நண்பா் அகீல் பலத்த காயமடைந்ததாா். அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். ஹரியாணா மாநிலம், குருகிராமில் பதிவு செய்யப்பட்ட விபத்துக்குக் காரணமான லாரியின் ஓட்டுநா் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டாா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஓட்டுநரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.