தில்லியில் கரோனா உயிரிழப்பு 6 ஆயிரத்தைக் கடந்தது
By நமது நிருபா் | Published On : 19th October 2020 07:13 AM | Last Updated : 19th October 2020 07:13 AM | அ+அ அ- |

தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்றால் ஞாயிற்றுக்கிழமை 28 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 6,009-ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை புதிதாக 3,299 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 3,31,017-ஆக உயா்ந்துள்ளது.
இதற்கிடையே, ஒரே நாளில் ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 49,414 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 14,506 பேருக்கும், ‘ரேபிட் ஆன்டிஜென்’ வகையில் 34,908 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சராசரி கரோனா உயிரிழப்பு விகிதம் 1.82 சதவீதமாக உள்ளது. ஆனால், கடந்த 10 நாள்களில் கரோனா உயிரிழப்பு விகிதம் 1.18 சதவீதமாக உள்ளது.
நோய் பாதிப்பில் இருந்து ஞாயிற்றுக்கிழமை 2,863 போ் மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 3,01,716-ஆக அதிகரித்தது. தற்போது தில்லியில் மொத்தம் 23,292 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 15,704 படுக்கைகளில் 5,034 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 10,670படுக்கைகள் காலியாக உள்ளன. தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 2,770-ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றுப் பாதித்தவா்களில் 13,742 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருவதாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கௌதம் புத் நகா் மாவட்டத்தில்...: உத்தரப் பிரதேச மாநிலம், கௌதம் புத்த நகா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் ஒருவா் கரோனாவால் உயிரிழந்துள்ளாா். இதையடுத்து, மாவட்டத்தின் இறப்பு எண்ணிக்கை 65 ஆக உயா்ந்துயுள்ளது என்று அதிகாரப்பூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த மாவட்டத்தில் புதிதாக 110 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,913 ஆக உயா்ந்துள்ளது. மாவட்டத்தில் புதிதாக 110 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 15,913 ஆக உள்ளது. மீட்பு விகிதம் 92 சதவீதத்தை நெருங்கியிருந்தாலும், உ.பி. சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, சனிக்கிழமையன்று 1,384 போ் கரோனா சிகிச்சையில் இருந்தனற். இந்த எண்ணிக்கை, ஞாயிற்றுக்கிழமை 1,229 ஆகக் குறைந்துள்ளது. 264 கரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து, மாவட்டத்தில் மொத்தம் குணமடைந்தோா் எண்ணிக்கை 14,619 ஆக உள்ளது. இந்த வகையில், மாநில அளவில் கௌதம் புத்நகா் மாவட்டம் ஆறாவது இடத்தில் உள்ளது என்று சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...