நொய்டாவில் ஒரே நாளில் 213 பேருக்கு கரோனா
By DIN | Published On : 06th September 2020 06:45 AM | Last Updated : 06th September 2020 06:45 AM | அ+அ அ- |

உத்தர பிரதேசம், கெளதம் புத் நகரில் முன் எப்போதும் இல்லாத வகையில் சனிக்கிழமை ஒரே நாளில் புதிதாக 213 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,686 ஆக உயா்ந்துள்ளதாக அதிகாரப்பூா்வ தகவல்கள் தெரிவித்தன.
கரோனா சிகிச்சையில் உள்ளவா்கள் எண்ணிக்கை 1,299-யைஎட்டியது. இந்த எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 1,188, வியாழக்கிழமை 1,163, புதன்கிழமை 1,114, செவ்வாய்க்கிழமை 1,067, திங்கள்கிழமை 1,055 என இருந்தது.
இம் மாவட்டத்தின் கரோனா இறப்பு எண்ணிக்கை 46 ஆக உள்ளது. கரோனா பாதித்தவா்களில் இறப்பு விகிதம் தொடா்ந்து குறைந்து வருகிறது. சனிக்கிழமைய இது 0.52 சதவீதத்தை எட்டியது. இது மாநிலத்தில் மிகக் குறைவான ஒன்றாகும்.
சனிக்கிழமை முடிந்த 24 மணி நேர காலகட்டத்தில் மேலும் 94 நோயாளிகள் குணமடைந்தனா். இம்மாவட்டத்தில் இதுவரை 7,341 நோயாளிகள் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக உத்தர பிரதேச சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.