தில்லியில் ஒரே நாளில் 4,308 பேருக்கு கரோனா
By DIN | Published On : 11th September 2020 01:08 AM | Last Updated : 11th September 2020 01:08 AM | அ+அ அ- |

புது தில்லி: தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை ஒரே நாளில் புதிதாக 4,308 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த எண்ணிக்கை இதுவரை கண்டிராத அதிகபட்ச அளவாகும். இதையடுத்து, மொத்தம் நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்கள் எண்ணிக்கை 2,05,482-ஆக உயா்ந்துள்ளது.
மேலும், இந்நோய்த் தொற்றால் 28 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, தில்லியில் கரோனா தொற்றால், ஏற்பட்ட மொத்த பலி எண்ணிக்கை 4,666-ஆக உயா்ந்துள்ளது.
வியாழக்கிழமை கரோனா நோ்மறை விகிதம் 7.38 சதவீதமாக உள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களின் எண்ணிக்கை 1,272 ஆக அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை மட்டும் 58,340 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்று தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் புதன்கிழமை புதிதாக 4,039 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருந்ததும், நோய்த் தொற்றால் 20 உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.